மெட்டா நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு 88,500 யூரோக்கள் அபராதம்

by Editor
0 comment

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளில் விளம்பரங்களை காட்டுவதற்காக பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை தவறாக பயன்படுத்தியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பயனர்களின் செயல்பாடுகளை வைத்து தகவலை திரட்டி அவர்களுக்கு ஏற்றவாறு செயலிகளில் விளம்பரங்களை காட்டுவது ‘behavioral advertising’  எனப்படுகிறது.

பயனர்களுக்கு ஏற்றவாறு விளம்பரங்களை காட்டுவதற்காக தனி நபர் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக கூறி நார்வே தரவு பாதுகாப்பு துறை datatilsysnet, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு அபராதம் விதித்துள்ளது.

‘மெட்டா நிறுவனத்தின் இந்த விளம்பர முறை பயணங்களில் தனிப்பட்ட  விவரங்களை சேகரிப்பதோடு, பயனர்களையும் கண்காணிக்கிறது. இது பேச்சு சுதந்திரத்திற்கும் தனியுரிமை  கொள்கைகளுக்கும் அச்சுறுத்தலானது.

மேலும் ஒருவரின் மிக முக்கியமான தனிப்பட்ட விவரங்களை விளம்பரம் தொடர்பான விடயங்களுக்காக பயன்படுத்துவது சரியானது அல்ல. எனவே  மெட்டாவில் செயல்பாடுகள் தரவு காப்பு சட்டத்திற்கு எதிரானது’ என கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி நார்வே நாட்டின் தரவு பாதுகாப்புத்துறை அதிகாரி தோபியாஸ் என்பவர் தெரிவித்திருந்தார்.

அடுத்த மூன்று மாதங்களுக்கு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இத்தகைய முறையிலான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் வரும் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதிக்குள் அவர்கள் தரப்பு வாதங்களை வழங்க மெட்டா நிறுவனத்திற்கு காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

ஒருவேளை இந்த குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் ,ஒரு நாளைக்கு சுமார் 88,500 யூரோக்கள் மெட்டா  நிறுவனம் அபராதமாக வழங்க நேரிடும்என நார்வே நாட்டின் தரவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

ஐரோப்பா மெட்டா நிறுவனத்தின் மிக முக்கியமான களமாக திகழ்கிறது. 2022-ஆம் ஆண்டு கணக்கின்படி, ஐரோப்பாவிலிருந்து மட்டும் பேஸ்புக்கை தினம் 300 மில்லியன் பயனர்கள் பயன்படுத்துகின்றனர்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech