Wednesday, April 22, 2026

பிரான்சை வாட்டி வதைக்கப்போகும் வெயில்

by Editor
0 comments

கடுமையான வெப்பம் காரணமாக பிரான்சில் வெப்ப நிலை அடுத்த வாரம் வரை உயர்ந்து காணப்படும் என்றும், வெப்ப அலைகள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த வெயில் காலத்தின் உச்சக்கட்ட வெப்ப அலை பிரான்சின் தென் பகுதியில் வீச உள்ளது.

இந்த வாரயிறுதி முதல் அதிகரிக்கும் வெப்ப நிலை, அடுத்த வார துவக்கத்தில், திங்கள் அல்லது செவ்வாய் கிழமைகளில் வெப்ப அளவின் உச்சக்கட்டத்தை அடையும்.

பன்னிரெண்டு மாவட்டங்கள் ‘ஆரஞ்சு’ கண்காணிப்பின் கீழ் வந்துள்ளன.

தென்மேற்கு பகுதிகளில் 33 முதல் 36° டிகிரி வரையிலும், வட பகுதியில் 30° டிகிரி செல்சியஸ் வரையிலும் செல்லக்கூடும்.

புரொவான்ஸ் பகுதிகளில் அதிகபட்சமாக 39° டிகிரி செல்சியஸ் வரை செல்லக்கூடும் என பிரான்சின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1947 ஆம் ஆண்டு முதல் இதுவரை 46 வெப்ப அலைகள் பதியப்பட்டுள்ளன. அவற்றில் பத்து ஆகஸ்ட் மாதத்திலும், பத்தில் ஆறு வெப்ப அலைகள் ஆகஸ்ட் 15-ற்கு பிறகும் நிகழ்ந்துள்ளன என்று வானிலை ஆய்வாளர் லொரியன் தெரிவித்துள்ளார்.

You may also like

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2026. All Rights reserved. Powered by NakshatraTech