கத்தார் மற்றும் இந்தியாவுடனான புதிய வணிக ஒப்பந்தங்களின் மூலம் பிரான்ஸ் ஆயுத ஏற்றுமதியில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதனால், பிரான்ஸ் உலகின் இரண்டாவது பெரும் ஆயுத விற்பனையாளராக அமெரிக்காவுக்கு பிறகு இரண்டாம் இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூலை 14ஆம் தேதி பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டங்களின் போது இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்திய முப்பாடைகளின் அணிவகுப்பும் அதில் இடம்பெற்றது.
உலகளாவிய ஆயுத விற்பனைகளை கவனித்து வருபவருக்கு இது ஆச்சரியம் ஏற்படுத்தாது.
இந்தியா தன்னுடைய கப்பற்படைக்கு ஆறு ஸ்கார்பென் வகை நீர்மூழ்கிகளும் 26 ரஃபால் போர் விமானங்களும் வாங்க உள்ளது.
ஜூலை 25, கத்தாரும் 24 ரஃபால் விமானங்களை வாங்க பிரான்சிடம் கேட்டுள்ளது.
2018- 2022 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பிரான்சின் ஆயுத தளவாடங்களின் வணிகம் 11 சதவிகிதம் உயர்ந்தது. அதே காலக்கட்டத்தில் ரஷ்யாவின் உலகளாவிய ஆயுத வணிகம் 22 லிருந்து 16 சதவீதமாக குறைந்தது.
‘ பிரான்சிடம் தற்போது 210 ஓர் விமானங்களுக்கான ஆர்டர் கைவசம் உள்ளது. ஆனால் ரஷ்யாவிடம் உள்ளது வெறும் 84 தான்’ என்று ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த வெஸ்மான் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுடனான போரில் ரஷ்யாவுக்கு போர் முனைக்கும், போரில் அழிந்த ஆயுதங்களை மாற்றியமைக்கவும் அதிகளவு ஆயுதங்கள் தேவைப்படுவதாலும் ரஷ்யாவின் ஆயிரத்தில் ஒருத்தனை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
அதோடு, பொருளாதார தடையினால் ஆயுத தளவாட உற்பத்திக்கு தேவையான பொருட்களை பெறுவதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
போர் முனையில் இருந்து வரும் செய்திகளும் ரஷ்யாவில் மதிப்பை மிகவும் குறைத்துள்ளது.
உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் ரஷ்யாவின் ஆயத தளவாட தொழில்நுட்ப வலிமைக்கான சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது என டென்வர் பல்கலைக்கழக பேராசிரியர் குலன் ஹென்ரிஸ் தெரிவித்துள்ளார்.
‘போரில் சேதமடைந்த ராணுவ டாங்குகள், சிக்கல்களுக்கு உள்ளாகும் ரஷ்ய ஏவுகணைகள் பற்றிய தகவல்கள் உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம். ஆனால் இந்த செய்திகள் ரஷ்யாவில் ராணுவ தொழிநுட்பத்தை வெளிக்காட்டுபவை அல்ல.
ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்த சில வாடிக்கையாளர்கள் திருப்தியாக இல்லை.
குறிப்பாக, பல்லாண்டு காலமாக ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்து வந்த இந்தியா தான் பெற்ற ஆயுத தளவாடங்களில் திருப்திகரமாக இல்லை. எனவே அவர்கள் பிரான்சின் பக்கம் திரும்பி உள்ளனர்’ என்றும் கூறியுள்ளார்
இதில் அரசியலும் உள்ளது. உக்ரனைனுடனான போரினால் ரஷ்யாவுடன் மேலதிக ராணுவ உறவுகளை அதிகரிக்க இந்தியா விரும்பவில்லை.
ரஷ்யாவிடமிருந்து போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தை இந்தோனேசியா 2021 ஆம் ஆண்டு நிறுத்தியது.
இருப்பினும், ஆப்பிரிக்காவிற்கும் ஈரான் மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கும் ஆயுதம் தளவாட விற்பனையில் ரஷ்யாவின் பங்கு உயர்ந்தே இருக்கிறது.
பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் ரஃபால் போர் விமானம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
2015 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக ர&பால் விமானம் ஏற்றுமதி செய்யப்பட்டது.
தற்போது இந்த போர் விமானம் கிரீஸ் கத்தார் இந்தியா மற்றும் எகிப்தாகிய நாடுகளிடம் உள்ளது.
விரைவில், குரோஷியா இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளும் இவ்விமானத்தை வாங்க உள்ளன.
இதுவரை 500 ரஃபால் விமானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், இன்னும் சில ஆர்டர்களும் பேச்சுவார்த்தையில் உள்ளன.
கொலம்பியா 16 விமானங்களுக்கான ஒப்பந்தத்தை விரைவில் முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செர்பியாவும் 12 ரஃபால் போர் விமானங்களை வாங்க உள்ளதாக தெரிகிறது.
அரசியல் காரணங்களை தாண்டி ரஃபால் போர் விமானம் மிகவும் தரமானது. அதோட விமானங்களில் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் ஆயுத தளவாட உற்பத்தியின் வெற்றிக்கு ரஃபால் போர் விமானமும் மிக முக்கிய காரணமாகும்.
உக்ரைன் போரினால் ஐரோப்பிய ஆயுத வணிகம் அதிகரித்து இருந்தாலும் பிரான்ஸ் தொடர்ந்து அதற்கான பலன்களை பெற தவறிவிட்டது.
அமெரிக்காவின் அணு ஆயுதங்களை தாங்கி செல்ல வல்லதால் நேட்டோவிலுள்ள ஐரோப்பிய நாடுகள் லாக்ஹீட் மார்டின் F-35 ரக விமானங்களையே விரும்புகின்றன.
இருப்பினும், டசால்ட் ஏசியேஷன் நிறுவனத்தின் பங்குகள் கடந்து பிப்ரவரி 2022 ஆம் ஆண்டு முதல் இருமடங்காக உயர்ந்துள்ளன.
கடந்த 2021 ஆம் ஆண்டு சீனாவை பின்னுக்கு தள்ளி உலகின் மூன்றாவது பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக பிரான்ஸ் இடம் பிடித்தது.
பிரான்சின் ஆயுத விற்பனை கடந்த 10 ஆண்டுகளில் எந்த நாடுகளும் அடையாத அளவிற்கு 59 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பிரான்சை போன்று தென் கொரியாகவும் வேகமாக வளர்ந்து வருவதால், ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி பிரான்ஸ் உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக உயர்வது இன்னும் உறுதியாக்கப்படவில்லை.
‘2024 ஆம் ஆண்டு இல்லாவிட்டாலும் 2025 அல்லது 2026 ஆம் ஆண்டு, பிரான்ஸ் நிச்சயமாக ரஷ்யாவுக்கு இணையாகவோ அல்லது அதை விட அதிகமாகவோ ஆயுத ஏற்றுமதியில் முன்னேறும்’ என்று வெஸ்மன் தெரிவித்துள்ளார்.