108
மர்சேயிலுள்ள Félix-Pyat எனும் இடத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
இதில் 15 வயது பதின்ம வயதினர் ஒருவர்யிர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த திங்களன்று இரவு மர்சையில் உள்ள மூன்றாவது வட்டத்தில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.
அப்பகுதியில் உள்ள சீசா பார் ஒன்றில் நுழைந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் முகத்திலும், கழுத்திலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து நால்வர் காயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடத்திய ஆய்வில் 9 எம்.எம். ரக துப்பாக்கி ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.