வருகின்ற ஜனவரி 1, 2024 முதல் வேக கட்டுப்பாட்டை அதிகபட்சமாக 5 கிலோமீட்டர் வரை மீறுபவர்களுக்கு புள்ளிகள் ஏதும் குறைக்கப்படாது என்று அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் வழக்கம் போல அபராதம் விதிக்கப்படும்.
பிரான்சில் பொதுவாக வேக கட்டுப்பாட்டை மீறி அதிக வேகத்தில் செல்பவர்களுக்கு அபராதமும் அவர்களுடைய ஓட்டுனர் உரிமத்தில் புள்ளிகளும் குறைக்கப்படும்.
பிரான்சில் ஓட்டுநர் உரிமம் பெறுபவர்களுக்கு 12 புள்ளிகள் வழங்கப்படும். அவர்கள் விதிகளை மீறும் போது இந்த புள்ளிகள் குறைக்கப்படும் ஒருவேளை அவர்களுக்கு வழங்கப்பட்ட எல்லா புள்ளிகளும் தீர்ந்து விட்டால் அவருடைய ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். அவர்கள் மீண்டும் முதலில் இருந்து ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும்.
‘குறிப்பிட்ட வேகத்தை விட மணிக்கு ஐந்து கிலோமீட்டர் வேகம் கூடுதலாக செல்பவர்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்க வழி செய்ய வேண்டும்’ என்று செனட்டர் ஒருவருக்கு உள்துறை அமைச்சர் ஜெரால்டு தர்மனின் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
பிரான்சில் சாலை விபத்துகளில் இறப்பவர்களின் விகிதம் கடந்த ஆண்டு 14 சதவீதம் குறைந்ததை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மார்ச் மாதத்தில் மட்டும் 195 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 226.
அதோடு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 15 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Marseille :நால்வர் மீது துப்பாக்கி சூடு : மூவர் கவலைக்கிடம்
மர்சேயிலுள்ள Félix-Pyat எனும் இடத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
இதில் 15 வயது பதின்ம வயதினர் ஒருவர்யிர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த திங்களன்று இரவு மர்சையில் உள்ள மூன்றாவது வட்டத்தில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.
அப்பகுதியில் உள்ள சீசா பார் ஒன்றில் நுழைந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் நால்வர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்குவந்த காவல்துறையினர் அங்க நடத்திய ஆய்வில் 9 எம்.எம். ரக துப்பாக்கி ஒன்றை கைப்பற்றினர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.