அடுக்குமாடி குடியிருப்பில் தீ : ஒருவர் கைது

by Editor
0 comment

பாரிசின் 16வது வட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரான்சின் தலைநகர் பாரிசிலுள்ள Rue de la Source வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (சனிக்கிழமை) மாலை திடீரென்று தீப்பிடித்தது.

இதனையடுத்து அக்குடியிருப்பில் வசித்து வந்த அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தீ வேகமாக பரவிய நிலையில் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நச்சுப்புகையால் பாதிக்கப்பட்ட இருவரை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இரவு 9:30 மணியளவில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்து தொடர்பாக 28 வயது இளைஞரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குடிபோதையில் அவர் தன்னுடைய வீட்டிற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech