தற்செயலான காவல்துறை சோதனையில் சிக்கிய 220 கிலோ கஞ்சா

by Editor
0 comment

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தற்செயலாக நடத்திய வாகன சோதனையில் 220 கிலோ கஞ்சா போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மர்சேயில் நேற்று மதியம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்த காரை சோதனையிட்டு ஓட்டுநரிடம் வாகனத்திற்கான ஆவணங்களை கேட்டுள்ளனர். காரையும் சோதனையிட்டுள்ளனர்.

சோதனையில் காரில் வைக்கப்பட்டிருந்த 220 கிலோ கஞ்சா பிசின் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து காரின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

32 வயதான அந்நபர் அண்மையில் தான் சிறையில் இருந்து வெளியே வந்தார் என்றும், ஏற்கனவே போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக காவல்துறையினருக்கு அறிமுகமானவர் என்றும் கூறப்படுகிறது.

இதுபோன்று நூற்றுக்கணக்கான கிலோ எடையுள்ள கஞ்சா போதை பொருள் சிக்குவது மர்சே நகரில் புதிதல்ல. கடந்த மே மாதம் அடுக்குமாடி குடியிருப்பில் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 250 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

எனினும் எதிர்பாராத விதமாக காவல் சோதனையில் கைப்பற்றப்பட்ட நூற்றுக்கணக்கான எடையுள்ள கஞ்சா பறிமுதல் காவல்துறையினரிடையே ஆச்சரியத்தை ஏற்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனின் அவர்களை பாராட்டியதோடு நேரிலும் சந்தித்துள்ளார். 

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech