Wednesday, April 22, 2026

காவலரை தாக்கிய நபர் மீது துப்பாக்கி சூடு

by Editor
0 comments

தன்னை தாக்க முயன்ற நபர்கள் மீது காவலர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்துள்ளார்.

சாலையில் காரில் வந்த இருவரிடம் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி கை கலப்பானது.

இதில் காரில் வந்தவர்கள் காவலரை அவர் காவலர் என்பது தெரியாமல் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அதில் ஒருவர் காவலரின் கழுத்தை நெறிக்கவே, அவர் தனது துப்பாக்கியை எடுத்து அவர்களை நோக்கி சுட்டுள்ளார்.

இதில் ஒருவருக்கு தோளில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இன்னொருவர் காவலரிடமிருந்து துப்பாக்கியை பறித்ததாக கூறப்படுகிறது.

உடனடியா அங்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்த நபரை மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவலருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக இரு வேறு விசாரணைகள் துவங்கப்பட்டுள்ளன.

You may also like

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2026. All Rights reserved. Powered by NakshatraTech