காவல்துறையிடமிருந்து தப்ப முயன்ற இருவர் விபத்தில் சிக்கி பலி

by Editor
0 comment

காவல்துறையின் வாகன சோதனையில் இருந்து தப்பிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் வேறொரு வாகனம் மோதியதில் பலியாகியுள்ளனர்.

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்களிடமிருந்து தப்பிக்க, 16 வயது சிறுவனும், அவருடைய நண்பனும் அவருடைய இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கித் தப்பிக்க முயன்றதில், வேறொரு வாகனம் மோதி கீழே விழுந்துள்ளனர்.

இதில் வாகனத்தை ஒட்டி வந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அவருடன் பயணித்த இன்னொருவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். 

வாகனத்தை ஓட்டி வந்த சிறுவர்களிடம் ஓட்டுனர் உரிமம் இல்லாததும், வண்டிக்கு காப்பீடு இல்லாததுமே அவர்கள் தப்பி சென்றதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இச்சம்பவத்தையடுத்து ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை காவல்துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech