பாரிசில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பாரிசின் 18 வது வட்டத்தில் (18th arrondissement) உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சனிக்கிழமை பிற்பகலில் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் அந்த குடியிருப்பின் முன் பகுதி கடுமையாக சேதமடைந்தது.
அதோடு ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தீ மேலும் பரவாமல் தடுக்க, நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்களும், 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
வெடி விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.