150 யூரோ கடனை திருப்பிக் கேட்ட இளைஞருக்கு கத்திக்குத்து

by Editor
0 comment

கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்தி கொன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Rioz, Haute-Saône-இல் 44 வயது நபர் ஒருவர் இளைஞர் ஒருவரிடம் 150 யூரோ கடன் வாங்கியுள்ளார்.

சம்பவத்தன்று அந்த பணத்தை திருப்பி கேட்க 22 வயது இளைஞரும் அவருடைய பெண் தோழியும் அந்நபரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கை கலப்பாகி அந்த நபர் இளைஞரின் நெஞ்சில் கத்தியால் குத்தியுள்ளார்.

சத்தம் கேட்டு அங்கு வந்த பக்கத்து வீட்டுக்காரர் படுகாயமடைந்து கீழே விழுந்த இளைஞருக்கு முதலுதவி செய்துள்ளார்.

இருப்பினும், முதலுதவி முயற்சிகள் பலனளிக்காமல் அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் அந்நபரை கைது செய்தனர். அவர் ஏற்கனவே போதை மருந்து வழக்கில் தண்டனை பெற்றவர் என்று கூறப்படுகிறது.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட இளைஞர் உள்ளூர் கால்பந்தாட்ட குழுவில் விளையாடி வந்தவர். உள்ளூர் மக்களுக்கு அறிமுகமானவர்.

இளைஞர் கொலை செய்யப்பட்ட வீட்டிற்கு முன் மக்கள் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech