106
எசோனிலுள்ள (Essonne) உலிஸ் நகரில் பதினாறு வயது இளைஞரின் உடல் உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வியாழனன்று உலிசில் (Ulis) நடு வீதியில் கிடந்த இளைஞரின் உயிரற்ற உடல் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
அவரை காப்பாற்ற தீயணைப்பு வீரர்கள் முயன்றும் பயனளிக்கவில்லை.
அன்று மாலையே சந்தேகத்திற்கிடமான நபரொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இக்கொலைச் சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் நம்புவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.