134
கடந்த புதன்கிழமை நகரமன்றத்திற்கு எதிரே தரையில் “Vikings will kill Colas” என்று எழுதப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டி மேயருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.
‘தரையில் எழுதப்பட்டிருந்தது நாஜிக்களின் சின்னத்தோடு கொடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் ஆகும். இது முதல் முறை அல்ல. சில மர்ம நபர்கள் இச்செய்தியை தெரிவித்துள்ளனர்” என்று Boussy-Saint-Antoine நகர மன்ற தலைவர் தன்னுடைய முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இவருக்கும் இவர் குடும்பத்தினருக்கும் ஏற்கனவே பலமுறை கொலை மிரட்டல்கள் கடிதங்கள் வாயிலாக அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முறை பொதுவிடத்தில் சம்பவம் நடைபெற்றுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.