பிரான்சில் உள்ள ஏர்பஸ் நிறுவனம் புதிதாக இவ்வாண்டு 3500 பேரை பணிக்கு எடுக்கவுள்ளது.
1970 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கும் 174 ஒப்பந்தங்களை மறுசீராய்வு செய்ய நான்கு தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ஏர்பஸ் நிறுவனம், 19 மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் இறுதி கட்டமாக இம்முடிவை எடுத்துள்ளது.
அதோடு தொழிற்சங்கங்கள் முன்னிறுத்திய சமூக பாதுகாப்பு வேலை நேரம் விடுமுறை மற்றும் இழப்பீடு தொடர்பான கோரிக்கைகளையும் நிறைவேற்றியுள்ளது.
இந்த புதிய மாற்றம் அடுத்த ஆண்டு 2024 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும். அதன்படி பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளன.
அதே நேரத்தில் வேலை நேரமும் ஆண்டின் கணக்குப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏர்பஸ் நிறுவனம் கடந்த ஆண்டு 13,000 பேரை உலகெங்கிலும் வேலைக்கு எடுப்பதாக கூறியிருந்தது. கடந்த திங்களன்று, அதில் 3500 பேரை பிரான்சில் பணியமர்த்துவதாக குறிப்பிட்டுள்ளது.
அவர்களில் 2300 பேர் வணிக விமான பிரிவிலும் 700 பேர் பாதுகாப்பு மற்றும் விண்வெளி பிரிவிலும் 500 பேர் உலங்கு வானூர்தி பிரிவிலும் பணியமர்த்தப்பட உள்ளனர்.