பாரிஸ் அருகே சாலையில் நடைபெற்ற ஒரு தகராறில் 28 வயது வாகன ஓட்டியை குச்சி மற்றும் இரும்பு தடியால் தாக்கியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Pantin (Seine-Saint-Denis) பகுதியில் ஒரு வாகன ஓட்டிக்கும் காரில் வந்த ஆறு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறி, அந்த வாகன ஓட்டியை ஆறு பேரும் சேர்ந்து கழி, இரும்பு தடி உள்ளிட்ட பொருட்களால் சராமாரியாக தாக்கி, தரையில் தள்ளியுள்ளனர்.
தகவலறிந்த அவசர சேவை பிரிவினர் அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சுயநினைவின்றி இருந்த அந்த நபர் தீவிர சிகிச்சைக்கு பின் சில நாட்களில் குணமடைந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக 27 வயது நபர் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவருடைய காரில் இருந்து ஒரு கைபேசியை கண்டறிந்துள்ளனர். பின்னர் அவருக்கு இந்த வழக்குக்கும் தொடர்பு இல்லை என்று கூறி விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பாக மர்ம நபர்களை தொடர்ந்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.