துருக்கியில் பூகம்பத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சிரியாவிலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட கடும் பூகம்பத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 3 வாரங்கள் கடந்தும் கணக்கிடப்பட்டு வருகின்றது. இன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி சிரியாவில் 5951 பேரும், துருக்கியில் 44,374 பெரும் பூகம்பத்தினால் இறந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த இரு நாடுகளிலும் முகமதுநகர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இந்த பூகம்பம் சிரியாவில் பல மாகாணங்களில் பேரழிவினை ஏற்படுத்தியுள்ளது. அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் 1414 பேரும், போராளிகளின் வசமுள்ள பகுதிகளில் 4537 பேரும் இறந்துள்ளனர்.
இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்கள் அனைத்தும் மருத்துவமனைகள், மருத்துவ முகாம்கள், உள்ளூர் நிர்வாகம் போன்றவற்றிலிருந்து பெறப்பட்டதாக சிரியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.