எரிவாயு மற்றும் மின்சார சேவை வழங்கும் என்ஜி நிறுவனத்தின் 2022 ஆம் ஆண்டு வருமானம் உக்ரைன் – ரஷ்யா போருக்கு நடுவிலும் 62% உயர்ந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரான்சை சேர்ந்த என்ஜி நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் வலுவான வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக எரிவாயு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் துறையின் வகையில் அதன் வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது. அதன் ஆண்டு வருமானம் 93.9 பில்லியன் யூரோக்களாக, அதாவது 2021 ஆம் ஆண்டை காட்டிலும் 62.2% உயர்ந்துள்ளது.
ஆனால் அக்குழுமத்தின் மொத்த லாப அளவை கணக்கிடும் போது 95 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 3.7 மில்லியனாக இருந்த லாபம் இவ்வாண்டு 200 மில்லியன் யூரோக்களாக கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உக்ரைன் போரினால் நிறுத்தப்பட்ட எரிவாயு குழாய் திட்டம், மூடப்பட உள்ள பெல்ஜிய அணு உலைகள் போன்ற சிக்கல்களால் அது கடும் மதிப்பிழப்பை அடைந்துள்ளது.
‘எங்கள் எங்கள் குழுமம் புதுப்பிக்க வல்ல எரிவாயு ஆற்றல் தொடர்பான திட்டங்களை நோக்கி பயணிக்கிறது’ என அந்நிறுவனத்தின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
என்ஜி நிறுவனத்தின் போட்டியாளரான டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனம் 2022 ஆம் ஆண்டு 19.5 பில்லியன் லாபம் ஈட்டியதாக சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.