செவ்ரானில் தாய் ஒருவர் தனது மகனுக்கு மதுவில் மாத்திரை கலந்து கொடுத்து கொல்ல முயன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. தகவல் அறிந்த வட்டாரங்களின்படி அந்த தாய் தன்னுடைய மகனுக்கு 28 மாத்திரைகளை காக்டெயிலில் கலந்து கொடுத்துள்ளார்.
olanzapine எனப்படும் மனநலத்திற்காக அளிக்கப்படும் 28 மாத்திரைகளை பாதிக்கப்பட்டவருக்கு கொடுத்துள்ளார். அவருடைய மகன் உயிர் பிழைத்துக் கொண்டாலும் விஷம் கொடுத்து கொல்ல முயற்சித்ததற்காக, மனநிலை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
அந்த மாத்திரை மனநல சிகிச்சைக்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கப்படும் மாத்திரை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.இதை 4 கிராம் எடுத்துக் கொண்டாலே உயிருக்கு ஆபத்தாக முடியும். அந்த இளைஞருக்கு கிட்டத்தட்ட 3.8 கிராமிலிருந்து 5.6 கிராம் வரை அளிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகனுக்கு மாத்திரைகளை அளித்தபின் அந்த தாயே அவசர மருத்துவ சேவையினரை அழைத்துள்ளார். உடனடியாக அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்நபரின் தாயார் ஏற்கனவே மனநிலை சிகிச்சையில் இருந்துள்ளார் எனவும் சில நாட்களாக மருந்துகளை உட்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.
இது தொடர்ந்து அவருக்கு மனநிலை பரிசோதனை நடத்தப்படுகிறது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.