நாயை கொடுமைப்படுத்தி கொன்றவர் கைது

by Editor
0 comment

திரான்சியில் பள்ளியின் வாயில் கதவில் நாயை தூக்கிலிட்டு கொன்ற நபர் ஐந்து நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

திரான்சியிலுள்ள (Drancy) போல் லெ ரொலான்ட் உயர்நிலைப் பள்ளியின் வாயில் கதவில் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி இரவன்று 35 வயது நபரொருவர் மலினோ (Malinois) வகை நாயொன்றை கயிற்றில் கட்டி தூக்கிலிட்டு கொன்றுள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திரான்சி காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் அவரை தேடி வந்தனர்.

விலங்கு நல ஆர்வலர்களால் அவருடைய புகைப்படம் வெளியிடப்பட்டதுடன் அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது.

இந்நிலையில், அவருடைய கைபேசியை கண்காணித்ததின் அடிப்படையில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த அந்த நபர் Bussy-Saint-Georges-இல் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

உடனடியாக அவருக்கு மனநல பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சமூக ஊடகங்களில் அவர் புகைப்படங்கள் வலம் வந்ததால் அந்த நபர் தலைமறைவாக பல இடங்களில் சுற்றித்திரிந்துள்ளார். இதனால் அவரை பிடிப்பதில் தோய்வு ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழை மாலை மூன்று மணியளவில் அந்த மனிதர் தன்னுடைய நாயை திரான்சி நகர வீதிகளில் இழுத்து சென்றதும், அதை பல முறை மோசமாக தாக்கியதும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன.

நாயை கொன்ற வழக்கில் அவருக்கு 75 ஆயிரம் யூரோக்கள் அபராதமும், ஐந்து வரும் சிறைத்தண்டனையும் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

வீடற்ற அந்நபர் மீது ஏற்கனவே ருமேனியாவில் பிடிவாரண்ட் உள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech