Wednesday, April 22, 2026

நடுவீதியில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை – மர்ம நபருக்கு வலைவீச்சு

by Editor
0 comments

இளம்பெண்ணைத் தாக்கி நடுவீதியில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த ஞாயிறன்று ஸ்ட்ரஸ்பூரிலுள்ள வணிக வளாகம் அருகே நடுவீதியில் வைத்து இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதிகாலை 6 மணியளவில் தனது கார் நிறுத்தப்பட்டிருக்கும் வாகன நிறுத்தத்திற்கு சென்றுக்கொண்டிருந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்ற நபரொருவர் அவரைத் தாக்கியதோடு, சாலையோரம் தூக்கிச் சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.

பெண்ணின் அழுகுரலை கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்ததும் மர்ம நபர் தப்பியோடி விட்டார்.

குற்றவாளிக்கு 20 முதல் 30 வயதிற்குள் இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் மூலம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

You may also like

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2026. All Rights reserved. Powered by NakshatraTech