காவல்துறை துரத்தியபோது ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்ற இளைஞர் காணாமல் போனதால் காவல்துறையினர் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அவ்வழியாக தொடர்புடைய இளைஞரும், அவரின் உறவினர்கள் இருவரும் திருடப்பட்ட ஒரு காரில் வந்துள்ளனர்.
காவல்துறையினரின் வாகன சோதனையிலிருந்து தப்பிக்க அவர்கள் அனைவரும் இறங்கி ஓடியுள்ளனர்.
காவலர்களிடமிருந்து தப்பிக்க அந்த இளைஞர் அருகிலிருந்த ஆற்றில் குதித்துள்ளார்.
தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் குதித்து தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
அவருடன் வந்த இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து நிலையில், தற்போது அவர்களை விடுவித்துள்ளனர்.