பெண்களை படம் பிடிக்க கழிவறைக்குள் இரகசிய கேமரா : பொறியாளர் கைது

by Editor
0 comment

பிரான்சை சேர்ந்த பிரபல தனியார் நிறுவனமான Thalès நிறுவன பொறியாளர் ஒருவர், உணவகத்தின் கழிவறைக்குள் இரகசிய கேமரா பொறுத்தி பெண்களை படம் பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பொறியாளர் பாரிசின் நான்காவது வட்டத்தின் Sainte-Croix-de-la-Bretonnerie பகுதியியுள்ள Eataly இத்தாலிய உணவகத்தின் பெண்கள் கழிவறைக்குள் சின்னன்சிறிய இரகசிய கேமராக்களை பொருத்தியுள்ளார்.

போலியான புகை கண்டுப்பிடிப்பு கருவிகளில் கேமராக்களை பொருத்தி அதன் வழியாக 200-ற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை அவர்களுக்கு தெரியாமல் படம் பிடித்துள்ளார்.

சந்தேகத்திற்கிடமான முறையில் அந்த கருவிகள் பொருத்தப்பட்டிருந்தை வைத்து கடந்த பிப்ரவரி மாதம் பெண்ணொருவர் இதை கண்டுபிடித்துள்ளார்.

இது தொடர்பாக நிறுவனத்தின் புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த பொறியாளரின் அலுவலக இடத்தை சோதனையிட்டனர்.

அங்கு ஏராளமான தடயங்களும், ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டன.

இதன் வாயிலாக குறைந்தது 200 பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஏற்கனவே மோன்பர்னாஸ் (Montparnasse) மாவட்டத்திலுள்ள ஒரு மெக் டொனால்ட்ஸ் உணவக கழிவறையிலிருந்து இதே போன்ற கருவி கேமராவுடன் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech