பிரான்சின் சுதந்திர நாளாக கருதப்படும் ஜூலை 14 (Bastille Day) விழாவில் பங்குகொள்ள இந்திய பிரதமர் மோடியை பிரான்ஸ் அழைத்துள்ளது. அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பஸ்தில் நாள் எனப்படும் பிரெஞ்சு தேசிய விழா கொண்டாட்டத்தின் போது நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்ள பிரான்சின் குடியரசு தலைவரான இம்மானுவேல் மக்ரோன் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன் மூலம் இரு நாட்டு நல்லுறவு வலுபெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பஸ்டில் நாள் என்பது பிரெஞ்சு புரட்சியில் ஒரு திருப்புமுனையாக இருந்த ஜூலை 14, 1789 அன்று பாஸ்டில் சிறைச்சாலையை தாக்கியதை நினைவுகூரும் பிரெஞ்சு வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாகும். பஸ்டில் நாள் அணிவகுப்பு நாட்டின் இராணுவம் மற்றும் அதன் சாதனைகளின் கொண்டாட்டமாக விளங்குகிறது .
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பது இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான இருதரப்பு உறவில் ஒரு மைல் கல்லாக இருக்கும்.
அண்மை ஆண்டுகளில், இரு நாடுகளும் பாதுகாப்பு, விண்வெளி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளன. பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை வலுப்படுத்துவதோடு பாதுகாப்பு சார்ந்த துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.