இராக்கில் பலியான இரண்டாவது பிரெஞ்சு வீரர்

by Editor
0 comment

ஈராக்கில் நடைபெற்ற இராணுவ பயிற்சியில் பிரெஞ்சு இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக பிரான்சு குடியரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

நிக்கோலஸ் லதூர்த் (Warrant Officer Nicolas Latourte) என்ற இராணுவ வீரர், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பயிற்சி நடவடிக்கையின் போது உயிரிழந்துள்ளதாக பிரான்சு இராணுவ தளபதி ஜெனரல் புர்கார்த் (General Burkhard) தெரிவித்துள்ளார்.

இராணுவ வீரர் நிக்கோலஸ், ஈராக்கின் ஆறாவது இன்ஜினியர் ரெஜிமெண்டை சேர்ந்தவர்.

‘தீவிரவாதத்திற்கு எதிராக அயராது போராடிய நிக்கோலஸ், ஈராக் இராணுவத்திற்கான பயிற்சிக்காக அனுப்பப்பட்டிருந்தார். அவரது மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது’ என பாதுகாப்புத் துறை அமைச்சர் செபாஸ்தியன் லெகொர்னு (Sébastien Lecornu) தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு இராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘ஞாயிறு மாலையன்று தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிக்கோலஸ் லத்தூர்த் படுகாயமடைந்தார். உடனடியாக எர்பிலுள்ள இராணுவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலமாக அவரை கொண்டு சென்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்து விட்டதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்’ என்று கூறியுள்ளது.

நிக்கோலஸ் லதூர்த் வெடிகுண்டுகளை கையாளும் பயிற்சியை ஈராக் இராணுவத்திற்கு அளிப்பதற்காக கடந்த மே மாதம் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டவர். 

கடந்த வெள்ளிக்கிழமை சர்ஜன்ட் பாப்திஸ்த் என்பவர் ஈராக்கில் நடைபெற்ற சாலை விபத்தில் பலியானது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech