241
பிரான்சில் பெண்ணை கொலை செய்து விட்டு தப்பியோடிய நபரை ஸ்பெயினில் வைத்து பிரான்சு குற்றத்தடுப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாரீசில் புகழ் பெற்ற ஆர்க் தே திரையம்ப் அருகேயுள்ள தெருவில் 39 வயது பெண்ணொருவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து பாரிஸ் காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் கொலையாளியும் இறந்த பெண்ணும் ஒன்றாக பழகி வந்தனர் என்பது தெரிய வந்தது.
ஆனால் கொலைக்கான காரணம் தெரியவில்லை.
இந்நிலையில் கொலை செய்த நபர் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டார்.
அவருக்கு பிடிவாரண்டு வழங்கப்பட்ட நிலையில் ஸ்பெயினில் வைத்து அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.