ரயில் நிலையங்களில் உடைமைகள் பாதுகாப்பு அறைகள்

by Special Correspondent
0 comment

பிரான்சின் சில முக்கிய நகரங்களில் பயணிகளுக்கான உடமை பாதுகாப்பு அறைகளை SNCF நிறுவனம் நிறுவியுள்ளது.

தனியார் நிறுவனத்துடன் இணைந்து 30 ரயில்வே நிலையங்களில் உடமைகள் பாதுகாப்பு அறைகளை பிரான்சின் போக்குவரத்து நிறுவனமான SNCF நிறுவ உள்ளது.

ரயில் நிலையத்திலிருந்து ஐந்து நிமிடத்திற்கும் குறைவான தூரத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த பாதுகாப்பு அறைகளில் பயணிகள் தங்கள் பெட்டிகள், பைகள், குழந்தை தள்ளு வண்டிகள் போன்றவற்றை முன் பதிவு செய்துவிட்டு வைத்துக் கொள்ள முடியும்.

ஒரு நாளைக்கு ஒரு பெட்டிக்கு ஆறு ஹீரோ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை இணையம் வழியாக கட்டலாம்.

பாதுகாப்பு காரணங்களாக பல ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அறையில் மூடப்பட்டுள்ளன.

இதனால் ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் கஃபேக்கள், விடுதிகள் மற்றும் கடைகளில் பயணிகள் தங்கள் உடைமைகளை வைத்து செல்லும் நிலை இருந்து வருகிறது.

ரயில் பணிகளுக்கான இந்த சேவையை Nannybag எனும் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த பிரெஞ்சு கம்பெனி 2016 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு முதல் பிரெஞ்சு அஞ்சல் (La Poste) நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றி வருகிறது.

SNCF-இன் Ma Gare செயலியின்ன் மூலம் இச்சேவையை பெறலாம்.

உடைமைகள் பாதுகாப்பு அறைகள் நிறுவப்பட உள்ள ரயில் நிலையங்கள் : 

Amiens, Arcachon, Avignon Centre, Beaune, Biarritz, Bourg-Saint-Maurice, Clermont-Ferrand, Lourdes, Massy TGV, Nancy, Nantes, Nîmes, Paris Bercy, Pau, Rennes, Rouen Rive Droite , Saint-Étienne Châteaucreux, Saint-Jean-de-Luz Ciboure, Toulon, Toulouse Matabiau, Tours and Vichy.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech