ஒபேர்வில்லியேவில் 35 வயது நபர் ஒருவர் அதிகாலையில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.
Rue du Landy வீதியில் நபர் ஒருவர் கத்திக்குத்தால் காயமடைந்துள்ளதாக வந்த தகவலையடுத்து காவல்துறையினரும் அவசர சிகிச்சை பிரிவினரும் அங்கு விரைந்துள்ளனர்.
அங்கு ரத்த வெள்ளத்தில் நபர் ஒருவர் நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.
படுகாயமுற்றிருந்த இந்தோ பாகிஸ்தானியரை அவசர சிகிச்சை பிரிவினரும் மருத்துவர்களும் காப்பாற்ற எவ்வளவு முயன்றும் அவர் உயிரிழந்தார்.
நண்பர்களுக்கிடையே கணக்கு வழக்கு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறையின் குற்றத்தடுப்பு பிரிவு காவலர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.