வணிக வளாகத்தில் அண்மையில் திறக்கப்பட்ட நகை கடை ஒன்று நடு இரவில் தாக்கி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
Thiais (Val-de-Marne) நகரில் Cléor எனும் பேரில் நகை கடை ஒன்று Belle-Épine வணிக வளாகத்தில் புதிதாக திறக்கப்பட்டு செயல்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று நடு இரவில் வணிக வளாகத்தில் புகுந்த கொள்ளையர்கள் கடையின் கதவை உடைத்து காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.
கொள்ளையர்கள் யார் என்று இதுவரை தெரியவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இதே போன்றதொரு கொள்ளை சம்பவம் Créteil-Soleil வணிக வளாகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த கொள்ளைக்காரர்களே இந்த கொள்ளைச் சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளார்களா என்பது தெரியவில்லை.