2022 ஆம் ஆண்டு மட்டும் 156 டன் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனின் தெரிவித்துள்ளார்.
இதில் 128 டன் கஞ்சா மற்றும் 27 டன் கொக்கைனும் 1.4 டன் ஹெராயினும் 273 கிலோ மற்ற போதைப்பொருட்களும் அடங்கும்.
முந்தைய ஆண்டை விட கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சாவின் அளவு 15 சதவீதமும், ஹெராயினின் அளவு 8 சதவீதமும், கொக்கைன் ஐந்து சதவீதமும் உயர்ந்துள்ளது.
இந்த போதை பொருள் பறிமுதல்கள் இதுவரை இல்லாத அளவுக்கு நடைபெற்றுள்ளதாக பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனின் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எல்லா சிக்கல்களையும் காட்டிலும் போதைப் பொருட்கள் கட<<<த்தலுக்கு எதிராக போராடுவது முதன்மை பணியாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
55% கொக்கைன் மேற்கிந்திய தீவுகள் மற்றும் கயானாவிலிருந்து கடத்தி வரப்படும் போது கைப்பற்றப்பட்டுள்ளது.
வரலாற்றிலேயே முதன்முறையாக கடந்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி பிரான்சில் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான லே ஹாவ்ர் துறைமுகத்தில் 1.9 டன் கொக்கைன் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.