பிறந்து ஒரு நாளேயான பச்சிளம் குழந்தையை கொன்று பைக்குள் வைத்திருந்த இளம்பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேன் சாந்தெனியில் இளம்பெண்ணுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வீட்டில் குழந்தை பிறந்த நிலையில், அவர் அக்குழந்தையை வெட்டி ஒரு பையில் வைத்திருந்ததாகவும், இதையறிந்த அப்பெண்ணின் நண்பர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர் குழந்தையை கொன்றதற்கான காரணம் தெரியவில்லை.
இதனைத் தொடர்ந்து அப்பெண்ணை காவல்துறையினர் கைது செய்து அவரை விசாரித்து வருகின்றனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு வால்துவாசில் இதே போல் வீட்டில் குழந்தை பெற்றெடுத்த 19 வயது தமிழ் பெண்ணொருவர் பிறந்த குழந்தையை ஜன்னல் வழியாக வெளியே வீசியெறிந்தது குறிப்பிடத்தக்கது.