Athis-Mons: ஆண் நண்பரை கத்தியால் குத்திய பெண்

by Editor
0 comment

குடும்ப சண்டையில் தன்னுடைய ஆண் நண்பரை கத்தியால் குத்திய பெண்ணொருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்திஸ் மோ நகரில் 56 வயதான நபர் ஒருவர் அவருடைய பெண் நண்பரால் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சேவை பிரிவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

‘அவருக்கு சுயநினைவு உள்ளது. அவருடைய இணையர் தவறுதலாக கத்தியால் குத்திவிட்டதாக தெரிவித்தார்’ என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மருத்துவமனையில் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

கொலை முயற்சி வழக்காக பதிவு செய்த காவல்துறையினர் 34 வயது பெண்ணை கைது செய்துள்ளனர். இந்த இணையர் ஏற்கனவே காவல் நிலைய வட்டாரத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக அறியப்பட்டவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech