ஆன்லைன் மூலமாக கஞ்சா விநியோகம் செய்ததாக சந்தேகத்தின் பெயரில் நான்கு பேர் கைது.
திரான்சியிலுள்ள ஒரு இடத்தில் இருந்து கஞ்சா போதைப்பொருள் கைமாறப்போவதாக காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலையடுத்து அவர்கள் ஒரு வாகனத்தை பின் தொடர்ந்தனர்.
வாகனத்தில் இருந்து இறங்கி நபர் ஒரு வீட்டிற்கு சென்று அங்கிருந்து பல பைகளை இன்னும் இருவருடன் கொண்டு வருவதை கண்டனர். உடனடியாக அவரை சுற்றி வளைத்த காவல்துறையினர் அவர்கள் கைது செய்தனர்.
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 27 கிலோ கஞ்சா போதை பொருளையும் 28000 யூரோ பணத்தையும் கைப்பற்றிய காவல்துறையினர், போதைப்பொருளை விநியோகம் செய்ததாக நான்கு பேரையும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
அவர்கள் ஆன்லைன் மூலம் வீட்டிற்கு இந்த போதை பொருளை வழங்கும் சேவையை செய்துள்ளனர். இதன் மூலம் இதன் மூலம் பெரிய லாபமும் பார்த்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.