பெண்ணை தாக்கிய சம்பவம் குறித்து விசாரிக்க சென்ற காவலரை கழுத்தில் கத்தியால் குத்திய 21 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன்னை தன் கணவர் தாக்குவதாக பெண்ணொருவர் புகார் அளித்ததையடுத்து அங்கு காவலர்கள் விரைந்துள்ளனர். சம்பவ இடத்தில் புகாரளித்த பெண்ணை தாக்கியவரை காவலர் ஒருவர் கைது செய்ய முயலும்போது அந்நபர் காவலரின் பின் தலையிலும் கழுத்திலும் கடுமையாக தாக்கியுள்ளார். உடனடியாக விரைந்த அவசர சேவை பிரிவினர் அந்த காவலரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக குற்ற வழக்குகளில் ஏற்கனவே தொடர்புடைய 21 வயது நபரான அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது மனைவியை தாக்கியதாகவும் அரசு அதிகாரியை கொலை செய்ய முயற்சித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.