Soisy-sous-Montmorency நகரில் காவல்துறை நடத்திய பாதுகாப்பு நடவடிக்கையின் போது , ஒரு வீட்டிற்குள் கஞ்சா பயிரிடப்பட்டிருந்ததை கண்டறிந்துள்ளனர்.
காவல்துறையின் குற்றத்தடுப்பு பிரிவினர் தங்களது வழக்கமான பாதுகாப்பு சோதனையின் போது ஒரு கட்டிடத்திலிருந்து வலுவான கஞ்சா வாசனை வருவதை உணர்ந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் அக்கட்டிடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு வீட்டில் 74 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் வீட்டில் இருந்து கஞ்சா பயிரிடப்படுவதற்கு தேவையான கருவிகளையும் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த பெண்ணை விசாரித்தபோது அவர் அந்த வீட்டை தன்னுடைய மகனுக்கு வாடகைக்கு விட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய மகன் அந்த வீட்டை கஞ்சா போதைச்செடியை பயிரிடுவதற்கான இடமாக பயன்படுத்தியது தனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
காவல்துறையில் விசாரணையில் அவருடைய மகன் தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்காக கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததை ஒத்துக்கொண்டுள்ளார். தனது தாயின் அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா வளர்ப்பதற்கு பயன்படுத்தியுள்ளார். .அவருக்கு 12 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருடைய தாயார் விடுவிக்கப்பட்டுள்ளார்.