போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பெண்ணுக்கு தூக்குத்தண்டனை

by Editor
0 comment

சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான பெண் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் சரிதேவி டிஜமானி என்ற 45 வயது பெண் 31 கிராம் ஹெராயின் கடத்தியதாக கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதால் கடந்த 2018-ம் ஆண்டு அவருக்கு தூக்குத்தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவருக்கு மேல்முறையீடு, அதிபரிடம் மன்னிப்பு கடிதம் போன்ற மேல்முறையீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இந்த பெண்ணின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என சிங்கப்பூர் அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தன.

ஆனால், அவரது மேல்முறையீட்டு மனு நிராகரிப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சரிதேவி டிஜமானிக்கு நேற்று தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

 இதற்கு முன்னதாக கடந்த 2004-ம் ஆண்டு மே வொன் என்ற பெண் போதைப்பொருள் வழக்கில் தூக்கிலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பின் சிங்கப்பூரில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவர் போதைப்பொருள் கடத்தியதற்காக நேற்று தூக்கிலிடப்பட்டுள்ளார்.

அண்டை நாடான தாய்லாந்து கஞ்சா பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்கி உள்ளது. மலேசியாவில் கடுமையான குற்றங்களுக்கு விதிக்கப்படும் கட்டாய மரண தண்டனை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech