பாரிசில் பெண் சுற்றுலா பயணிக்கு பாலியல் வன்கொடுமை : இருவர் கைது

by Editor
0 comment

பிரான்சுக்கு சுற்றுலா வந்திருந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த ஐவரில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மெக்சிகோவிலிருந்து பிரான்சுக்கு வந்திருந்த 27 வயது பெண்ணை ஐந்து பேர் கொண்ட கும்பல் பாரிசின் முக்கிய இடங்களுள் ஒன்றான Champ-de-Mars அருகே அதிகாலை ஒரு மணியளவில் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேரில் இருவரை கைது செய்துள்ளனர். மற்ற மூவரை தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பாதிக்கப்பட்ட பெண் குடிபோதையிலிருப்பதை கண்ட அந்த நபர்கள், அதை பயன்படுத்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Champ-de-Mars பகுதியில் இப்படியான நிகழ்வு நடப்பது புதிதல்ல. கடந்த ஏப்ர மாதம் இதே இடத்தில் ஜெர்மனியை சேர்ந்த பெண்ணொருவர் பாலியல் வன்புணர்வு சம்பவத்திலிருந்து தப்பித்துள்ளார். இரு மாதங்களுக்கு முன்பு, பிரேசிலை சேர்ந்த இரு சகோதரிகள் தாக்குதலுக்கு ஆளான நிலையில், இளைய சகோதரி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார்.

இது போன்ற சம்பவங்களை தவிர்க்க, இரவு நேரங்களில் champ-de-mars பகுதியை மூடுமாறு பாரிசின் 15வது வட்ட நகரன் மன்ற தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மே மாதம் முதல் காவல்துறையின் பறக்கும் படை பிரிவு ஒன்று ஈபிள் கோபுரத்தின் அருகே நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech