வார இறுதியில் நடைபெற்ற பார்ட்டியில் கலந்து கொண்டவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Ille-et-Vilaine-இல் உள்ள ஒரு நகரத்தில் மூன்று நாட்களாக நடைபெற்ற ரேவ் பார்ட்டி எனப்படும் கேளிக்கை கொண்டாட்டத்தில் கிட்டதட்ட 2500 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அவ்விடத்திற்கு வெளியே சோதனை நடத்திய ஷாந்தார்ம் காவல்துறையினர், பல முறைகேடுகளை கண்டறிந்தனர்.
14 பேர் குடிபோதையில் கார் ஓட்டி வந்ததும், 17 பேர் போதை பொருட்களின் தாக்கத்திலிருந்ததும், ஓட்டுனர் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தவர்களும் கூட வாகனத்தை ஓட்டியதும் கண்டறியப்பட்டது.
கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட அபராதங்களை காவல்துறையினர் அவர்களுக்குக்கு விதித்துள்ளனர்.
இறுதி நாள் ரேவ் பார்ட்டி அபராதத்துடன் முடித்து வைக்கப்பட்டுள்ளது.