தகராறின் போது ஜப்பானிய கட்டானா வாளைக்கொண்டு தாக்க முயன்ற நபர் ஷாந்தார்ம் காவல் துறையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
Pas-de-Calais-யில் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில், ஜப்பானிய வாளான கட்டானா எனப்படும் வாளைக் கொண்டு ஒருவர் மிரட்டுவதாக வந்த தகவலையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்துள்ளனர்.
அங்கு 66 வயது நபர் ஒருவர் ‘கடானா’ வாளினைக் காட்டி காவல்துறையினரை மிரட்டியுள்ளார். காவலர்கள் அவரை சமாதானப்படுத்த எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
மேலும் அந்நபர் காவலர்களை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து காவலர் ஒருவர் அந்நபரை இருமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் அவருக்கு காலிலும் வயிற்றிலும் குண்டடிப்பட்டது.
உடனடியாக அங்கு வரவழைக்கப்பட்ட அவசர பிரிவு சேவையினர் சுடப்பட்ட நபருக்கு முதலுதவி சிகிச்சையளித்தனர். ஆனால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை.
காவல்துறை உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
சம்பவத்திற்கு காரணமான காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.