104
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் துப்பாக்கி முனையில் நகைக்கடையை கொள்ளையடித்தவர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
பாரிஸின் மையப் பகுதியில் இரண்டாவது வட்டத்தில் அமைந்துள்ள நகைக்கடையில் மூன்று பேர் கொண்ட கும்பல் இன்று காலையில் ஆயுத முனையில் இக்கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளது.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கொள்ளை போன நகைகளின் மதிப்பு இன்னும் தெரிய வரவில்லை. ஆனால் 10 முதல் 15 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.