2023 ஆம் ஆண்டு முதல் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்கள் மற்றும் காயமடைபவர்களின் விகிதம் பெருமளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது இவ்வாண்டு ஜூன் 2023 வரை சாலை விபத்துகளில் இறப்பவர்கள் மற்றும் காயமடைபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பிரான்சின் போக்குவரத்து மற்றும் திட்டமிடுதல் துறை (DRIEAT) தெரிவித்துள்ளது.
சாலை பாதுகாப்பில் நல்ல முன்னேற்றத்திற்கான அறிகுறி எது என்று கருதப்படுகிறது.
ஆனால் எல்லா மாவட்டங்களும் சாலை பாதுகாப்பில் நேர்மறை முன்னேற்றங்களை கொண்டிருக்கவில்லை.
விபத்துக்கள் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட கணக்கெடுப்பு விகிதம் பாரிஸ், சேன் சாந்தெனி, வால் தெ மார்ன் உள்ளிட்ட மாவட்டங்களில் குறைந்திருந்தாலும் சேய்ன் எ மார்ன் (Seine-et-Marne) மற்றும் வால்துவாஸ் மாவட்டங்களில் உயர்ந்துள்ளது.
2023 ஆம் ஆண்டு துவக்கத்திலிருந்தே இல் தே பிரான்ஸ் மாநிலம் முழுக்க சேன் எ மார்ன் (Seine-et-Marne) தவிர்த்து சாலை விபத்து விகிதம் குறைந்திருதுள்ளது.
கடந்த ஆண்டே இந்த மாவட்டத்தில் சாலை விபத்து விகிதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஓராண்டில் மட்டும் 488 விபத்துக்கள் 30 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக ஆறு உயர்ந்துள்ளது.
பாரிஸ் மாவட்டத்தில் கடந்தாண்டு 13 சாலை விபத்து மரணங்கள் பதிவான நிலையில் இந்த ஓராண்டில் 11 உயிரிழப்புகளே பதிவாகியுள்ளன.
இல் தே பிரான்ஸ் மாநிலத்தில் மட்டும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை சாலை விபத்துகளில் 112 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2022 ஆம் ஆண்டு காட்டிலும் 25.8% குறைவாகும்.
இலகு ரக வாகன ஓட்டுனர்களே சாலை விபத்துகளில் அதிகம் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர் (37%).
இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் 31 சதவீதம் பேரும், பாதசாரிகள் 22 சதவீதம் பேரும், மிதிவண்டி ஆறு சதவீதம் பேரும் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.