இணைய காணொளி மூலம் சந்திப்புகளை நடத்தும் சேவையினை வழங்கும் ஜூம் நிறுவனம் தன்னுடைய பணியாளர்களை அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுமாறு அழைத்துள்ளது.
கோவிட் 19 காரணமாக வீட்டிலிருந்து அலுவலகப் பணியை மேற்கொள்ளும் ‘டெலி ஒர்க்கிங்’ அல்லது ‘WFH’ற்கு ஏதுவான செயலி தான் ‘சூம்’ (Zoom).
ஏனைய நிறுவனங்களைப் போல ‘சூம்’ நிறுவனமும் தன்னுடைய பணியாளர்களை டெலிவொர்க்கிங் மூலமாகவே நிர்வகித்து வந்தது.
இந்நிலையில் அலுவலகத்தில் இருந்து 80 கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருப்பவர்கள் குறைந்தது வாரத்தில் இரண்டு நாளாவது அலுவலகத்திற்கு வந்து செல்ல வேண்டுமென்று கூறியுள்ளது.
‘ ஹைபிரிட் ‘ எனப்படும் தொலைதூர பணி மற்றும் அலுவலகப் பணி இரண்டையும் கலந்து மேற்கொள்ளப்படும் பாணியை ஜும் நிறுவனம் பின்பற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கைகளை ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
கோவிட் காலத்தில் சுகாதாரத்தின் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளாலும், பாதுகாப்புக் காரணங்களாலும் தொலைதூரப் பணிக்கு ‘சூம்’ செயலி மிகவும் பயனுள்ளதாக இருந்ததால், பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
கோவிட் பெருந்தொற்றால் ‘சூம்’ செயலி மிகப்பெரும் வரவேற்பினையும் பயனாளர்களையும் பெற்றது. ஜனவரி 2023-இன் படி ஜூம் நிறுவனத்தில் 8400 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் பாதி பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.
செப்டம்பர் 2022-இன் படி ஜூம் நிறுவனத்தின் ஊழியர்களில் ஒரு சதவீதம் பேரே அலுவலகத்திற்கு தினம் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.