பாரிசில் நடுவீதியில் சுற்றுலா பயணியிடம் விலையுயர்ந்த கை கடிகாரத்தை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
தாய்லாந்தில் இருந்து பிரான்சுக்கு சுற்றுலா வந்திருந்த சுற்றுலா பயணி ஒருவரிடம் இருந்து மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் யூரோக்கள் மதிப்புடைய விலையுயர்ந்த கடிகாரத்தை இருவர் பறித்துள்ளனர்.
பாரிசின் எட்டாவது மாவட்டத்தில் (8th arrondissement) நடைபெற்ற இச்சம்பவத்தில் 25 மற்றும் 27 வயதுடைய இரண்டு திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடுவீதியில் அந்த சுற்றுலா பயணியை சுற்றிச் சூழ்ந்த நபர்கள், அவர் அணிந்திருந்த Richard-Mille கை கடிகாரத்தை பறித்துக்கொண்டு ஓடியதாக கூறப்படுகிறது.
இந்த திருட்டு சம்பவத்தை கண்ட காவல்துறையினர் அவர்களை விரட்டி பிடித்து கைது செய்தனர்.
அவர்களில் ஒருவர் மொரோக்கோ நாட்டை சேர்ந்தவர் என்பதும் இன்னொருவர் அல்ஜீரியன் என்பதும் காவல்துறை விசாரணை தெரிய வந்துள்ளது.
மூன்றாவது நபர் தேடப்பட்டு வருகிறார்.
திருடர்களும் இருந்து மீட்கப்பட்ட கைகடிகாரம் சுற்றுலா பயணம் திருப்பி அளிக்கப்பட்டது.