பாரிசில் வீட்டின் ஜன்னலை திறந்து வைத்து தூங்கிய பெண்ணை வீடு புகுந்து வன்புணர்வு செய்ந்த நபர் இரண்டு நாட்களுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரிசின் 11வது வட்டத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு பெண்ணொருவர் வீட்டின் ஜன்னலை திறந்த நிலையில் விட்டுவிட்டு தூங்கியுள்ளார்.
வீட்டில் ஜன்னல் திறந்திருப்பதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். கத்தியைக் காட்டி பணம் கேட்டும் மிரட்டியுள்ளார்.
அவரிடமிருந்து போராடி தப்பித்த அப்பெண் பக்கத்து வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் 22 வயதான இளைஞர் எனவும், அந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த நாற்பத்தெட்டு மணி நேரத்தில் குற்றவாளியை முனிசபல் காவல்துறையினர் அர்ஜெந்தையில் (Argenteuil) வைத்து கைது செய்துள்ளனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.