பாரிசில் உள்ள ஈபிள் கோபுரத்துக்கு ஒரே நாளில் இரு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குண்டு இருப்பதாக வந்த அழைப்பினை அடுத்து இன்று மாலை அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
ஈபிள் கோபுரத்தை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டது. மோப்ப நாய்கள் வெடிகுண்டு சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன.
நண்பர்கள் 1:30 மணி அளவில் முதல் முறை மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் பிற்பகல் 3:30 மணி அளவில் மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
மாலை 7:30 மணியளவில் மீண்டும் வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து இரண்டாம் முறையாக மக்கள் ஈபிள் கோபுரத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தீவிர சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இரண்டு முறையும் ஒரே இடத்தில் இருந்து தான் மிரட்டல் அழைப்பு வந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து இது வெடிகுண்டு புரளி என்று தெரிய வந்துள்ளது.