பாரீசின் 15வது வட்டத்தில் நான்கு மாத குழந்தையை பரிசோதித்ததில் குழந்தைக்கு கொக்கைன் போதை மருந்து அளித்தது உறுதி செய்யப்பட்டது.
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
பரிசோதனைகளின் முடிவில் குழந்தைக்கு கொக்கைன் எனப்படும் போதை மருந்து அளிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து சிறார் பாதுகாப்பு குழு (BAM) விசாரணை மேற்கொண்டது.
அதன்படி குழந்தையின் தந்தையான முப்பது வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பாரீசின் ஆறாவது வட்டத்திலுள்ள அவருடைய வீட்டிலிருந்து சிறிய கொக்கைன் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குழந்தைக்கு கொக்கைன் அளித்ததை தந்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
குழந்தையின் உடல் நலன் தேறி வருகிறது.