17 வயது மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பள்ளி ஆசிரியர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர் மீதான வழக்கு வருகின்ற ஏப்ரல் மாதம் பொபிக்னி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு 41 வயது பள்ளி ஆசிரியர் ஒருவர், அவருடைய 17 வயது மாணவியான தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த பெண் வழக்கு பதிவு செய்துள்ளார். இதன் காரணமாக அவரை ஏற்கனவே தேசிய கல்வி ஆணையம் பணி இடை நீக்கம் செய்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் தானும் அந்த பெண்ணும் நெருங்கிய உறவில் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இருவரும் காதலித்ததாகவும், மின்னஞ்சல்களை பரிமாறிக்கொண்டதாகவும், பள்ளியில் சுற்றுலா சென்றபோது அப்பெண்ணிடம் அவர் தவறாக நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
தத்துவ ஆசிரியராக அவர் பதினெட்டு ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார். ஏற்கனவே உறவில் இருந்தவரை பழிவாங்கும் முயற்சியா இல்லை ஆசிரியராக தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினாரா என்பது வழக்கு விசாரணைக்கு பின்பே தெரியவரும்.