ஓய்வூதிய சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக பிரான்சில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து நிறைய தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்று வருகின்றன.
பிரான்சில் உள்ள பொர்தோ நகரில் நடைபெற்ற போராட்டத்தின் போது சில விஷமிகள் நகர மன்றத்திற்கு தீ வைத்துள்ளனர்.
Place Pey-Berland எனும் இடத்தை நோக்கி பேரணி நடைபெற்ற போது காவல்துறையினர் நகர மன்றத்தின் வாயில் தீப்பற்றி எரிவதை கண்டுள்ளனர்.
மேலும் சிலர் தீயை அதிகப்படுத்த அங்கு கிடைத்த குப்பைகள் உள்ளிட்டவற்றை கொட்டுவதையும் கண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நகர மன்றத்திற்கு தீ மூட்டிய இளைஞரையும், மேலும் 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
இதுகுறித்து பொர்தோ காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.