ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக தொடரும் போராட்டம் : இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு

by Editor
0 comment

பிரான்சில் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக ஒன்பதாவது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தில் எட்டு இலட்சம் பேர் பங்கேற்றுள்ளதாக தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.

பிரான்சு அரசு முன்னெடுத்துள்ள ஓய்வூதிய சீர்திருத்தத்தை எதிர்த்து பல தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை அறிவித்திருந்தன.

துவக்கப்பள்ளி ஆசிரியர்களும் மார்ச் 23 வேலைநிறுத்த போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

ஒன்பதாவது நாளாக நடைபெற்ற வேலைநிறுத்தம், போராட்டம் மற்றும் பேரணி காரணமாக பாரிசில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

பிற்பகல் இரண்டு மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியினால் பொது போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

Bastille மற்றும் Opéra இடையே நடைபெற்ற பேரணியில் எட்டு இலட்சம் மக்கள் பங்கேற்றதாக CGT தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

காவல்துறை தலைமையகம் 1,19,000 பேர் பங்கேற்றதாக தெரிவித்துள்ளது.

மாணவர் சங்கமான UNEF 1,50,000 இளைஞர்கள் போராட்டத்தில் கலந்துக்கொண்டதாக கூறியுள்ளது.

போராட்டக்காரர்கள் Place de l’opéra பகுதி நிரம்பியிருந்தது. இதனால் அப்பகுதியை நெருங்க இயலாத அளவு கடும் நெரிசல் ஏற்பட்டிருந்தது.

போராட்டத்தின் போது சேவை மையம் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது.

இதனையடுத்து போராட்டக்காரர்களை கண்ணீர் புகைக்குண்டு வீசி காவல்துறையினர் கலைத்தனர்.

மார்ச் 24 போராட்டத்தினால் பொது போக்குவரத்து சேவை அதிகளவு பாதிக்கப்படாது என்றாலும் இரயில் சேவை பாதிக்கப்படும் எனத்தெரிகிறது.

எனினும், பொதுப்போக்குவரத்து நிறுவனமான RATP போக்குவரத்து சேவை வழக்கம்போல இயங்கும் எனத் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech