பாரிசில் துப்புரவு தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பாரிசின் வீதிகளில் குவிந்துள்ள 10 டன்னுக்கும் அதிகமான குப்பைகளை அகற்ற துப்புரவு தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரான்சில் ஓய்வூதிய சீர்திருத்த திட்டத்தை எதிர்த்து துப்புரவு தொழிலாளர்கள் ஐந்தாம் நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வீதிகள் எங்கும் குப்பைகள் குவிந்துள்ளன.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் குப்பைகளை அள்ளக்கோரி துப்புரவு தொழிலாளர்களிடமும், நிறுவனங்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து 206 குப்பை வண்டிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
‘துப்புரவு தொழிலாளர்களின் போராட்டத்திற்கான உரிமையை நாங்கள் மதிக்கிறோம். அதே சமயம் பொதுச்சுகாதாரத்தை கருத்தில் கொண்டு குறைந்தளவு துப்புரவு பணியை மேற்கொள்ள கோரியுள்ளோம்’ என செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போராட்டத்தை விளக்கிக்கொள்ள கூறி ஏற்கனவே உள்துறை அமைச்சர் விடுத்த கோரிக்கையை பாரிஸ் நகர நிர்வாகம் ஏற்றுக்கொள்ள மறுத்தது குறிப்பிடத்தக்கது.