புதிய ஓய்வூதிய சட்டத்திற்கு எதிராக போராடி வரும் தொழிற்சங்கங்கள் பத்தாவது நாளாக நாளை பேரணியை ஏற்பாடு செய்துள்ளன.
Place de la République எனுமிடத்திலிருந்து இந்த பேரணி துவங்கும்.
மார்ச் 28 அன்று (நாளை) பிரான்ஸ் முழுவதிலும் போராட்டங்கள் நடைபெற தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளானர்.
இப்போராட்டம் துவங்கியதிலிருந்து, அதிகபட்சமாக 8 இலட்சம் பேர் கடந்த மார்ச் 23 போராட்டத்தில் கலந்துக்கொண்டனர் என்று CGT தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
பாரீசில் Place de la République எனுமிடத்தில் நண்பல் 1:30 மணியளவில் ஒன்றுகூடும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து சுமார் இரண்டு மணியளவில் துவங்கும் பேரணி, Nation, Boulevard Voltaire, Bastille வழியாக செல்லும்.
கிட்டத்தட்ட ஐந்தாயிரம் காவலர்களும், ஷாந்தார்ம் எனப்படும் சிறப்பு காவல்படையினரும் பாதுகாப்பிற்கான பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.
கடந்த மார்ச் 23 அன்று நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.